Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வங்கதேசம், நேபாளம்போல இந்தியாவில் நடக்காது: பிரஹலாத் ஜோஷி

வங்கதேசம், நேபாளம்போல இந்தியாவில் நடக்காது: பிரஹலாத் ஜோஷி

தேர்தல் தோல்விகளுக்கு பிரதமர் மோடியை குற்றம்சாட்டுவதற்குப் பதிலாக, களப்பணியில் ராகுல் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

நேபாளம், வங்கதேசத்தைப்போல இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இடதுசாரி மாணவர் அமைப்பான ஏஐஎஸ்ஐ தலைவர் நேஹா போரா, வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை அடுத்து அங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டி இருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:

பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தைப் போல இந்தியாவில் நடக்க வாய்ப்பே இல்லை. வங்கதேசம் எங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளதாக நேஹா போரா கூறியதன் பொருள் என்ன? வங்கதேசத்தில் நடந்தது என்ன? அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. 

பதவியில் இருந்த பிரதமர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கு சிறுபான்மையினரான இந்துக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். இந்த மாதிரியான சூழலைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? இத்தகைய நபருடன் ராகுல் தொடர்ந்து தொடர்பில் இருப்பது ஏன்? இந்த நாட்டில் என்ன நடக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

தேர்தல் தோல்விகளுக்கு பிரதமர் மோடியை குற்றம்சாட்டுவதற்குப் பதிலாக, களப்பணியில் ராகுல் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் முதல்வராகவோ, பிரதராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். 

எதிர்க்கட்சிகளின் சமீபத்திய போராட்டங்களுக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை என்பது அவர்கள் முன்வைக்கும் கருத்துகளை மக்கள் நிராகரிப்பதில் இருந்தே தெரிகிறது என தெரிவித்தார்.

முந்தைய செய்தி
Oil prices may ease to $80 per barrel in 2027 as Middle East supply recovers: Goldman Sachs
அடுத்த செய்தி
பருத்தி உற்பத்தியை அதிகப்படுத்த ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு

தொடர்புடைய செய்திகள்